எத்தனை முறை யோசித்து பார்த்தாலும் மீண்டும் மீண்டும் அதிசயமும் ஆசீர்வாதமும் இந்த வாழ்வை சுற்றி அமைந்து கொண்டே இருக்கிறது…

தியாகு அண்ணா என்னை பார்க்கும்போது எல்லாம் சொல்லுவாங்க கருப்பட்டி கடலைமிட்டாய் / Karuppati Kadalai Mittai சாப்பிட்டால் கேன்சர் குணமாகும் என்று…நேற்று வந்த தொலைபேசி அழைப்பில் இளம் குரல் ஒன்று எள்ளு மிட்டாய் பற்றி விசாரித்து விட்டு மென்குரலில் சொன்னார்கள்..
அப்பாவுக்கு புற்றுநோய் மருத்துவர் அதிகமா எள்ளு சார்ந்த உணவுகளை எடுத்துக்க சொன்னாங்க..இணையத்தில் தேடிய போது உங்களை பத்தி பார்த்தேன்என்று சொன்னார்கள்…

ஆரோக்கியத்தின் வேரினை தொட்டு விட்ட மகிழ்ச்சி உண்டானது… அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தான் போன் செய்து சொன்னேன்… பிள்ளைகளின் சத்து குறைபாடு நீக்கும் இந்த தின்பண்டத்தை தொடர்ந்து விடாம செய்யுங்க என்று ஏதோ ஒரு குரல் எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றது…

குட்டி பொன்னு போன் செய்து கேட்கிறாள் ஏன் இந்த முறை மிட்டாய் கொஞ்சம் கசப்பாக இருக்கிறது என கீச்சு குரலில்..


இருப்பு கருப்பட்டி அதனால் தான் இந்த முறை தித்திக்கும் என்று சொன்னேன்.ஒரு வேளை நான் நினச்சேன் அடுப்பில் ரொம்ப நேரம் விட்டுடிங்கன்னு..என அவள் சொன்னது மனசுக்கு நிறைவாகவே இருந்தது. இன்னும் பொறுப்புணர்வுடன் வேலை செய்ய முடிவு எடுத்து கொண்டேன்…

Pc : Vinodh Baluchamy Yuvan Sathish

Leave a Reply

Your email address will not be published.