இந்த சுதந்திர தின நன்னாளில் கருப்பட்டி கடலைமிட்டாய் / Karuppati Kadalai Mittai  புதிய தயாரிப்பினை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

கடல்பாசி கருப்பட்டி கடலை மிட்டாய் (Spirulina Palm Jaggery Groundnut Bar)

கடந்த ஆண்டு ஜூலை மதுரையில் இதற்கான முயற்சிகளை துவக்கினோம்.
மதுரையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் Antenna Trust  நிறுவனத்தின் உதவியுடன் இந்த பணிகளை துவக்கினேன்.

கல்லூரி காலங்களில் மிக நெருங்கிய அண்ணா இனி வரும் காலங்களில் இந்த கடற்பாசி உணவுகள் மிக முக்கிய பங்காற்றும் என்று சொன்ன சொற்கள் நினைவில் வருகிறது. அவர் அந்த தயாரிப்பின் மாத்திரைகளை, அது கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய துவங்கி இருந்தார்.

ஒரு அமானுஷிய கதை போல் கேட்ட ஒரு உணவு பொருள் மீண்டும் என் வாழ்வில் வந்துள்ளது. இந்த கடற்பாசியை இந்தியா மட்டும் உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் antenna trust இந்த அமைப்பின் நிறுவனர். புற்றுநோய் தாக்கத்தில் இருந்து இந்த கடற்பாசியினால் செய்த மருந்துகளே அவரின் வாழ்வை காப்பாற்றிய காரணத்தினால் அதை அவர் உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பணியினை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.அதனை தொடர்ந்து வெகு சிரத்தையுடன் உற்பத்தி செய்து வருகின்றனர்.

சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இது நல்ல ஒரு மாற்று உணவாக இருக்கும் என அவர்கள் கள ஆய்வு கூறுகிறது.மிக குறைந்த அளவு இதனை தினசரி உணவில் எடுத்து கொண்டால் போதும்.

அதனால் சுவையான கருப்பட்டி கடலை மிட்டாய் உடன் இந்த பச்சை நிறங்கொ ண்ட கடற்பாசி பொடியினை கலந்து ஆரோக்கிய தின்பண்டம் தயாரித்து உள்ளோம்.

எல்லொரும் விரும்பும் வகையில் இதனை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்…

முன்னோர்கள் உணவாக கடற்பாசி உணவு வகைகள் இருந்த தகவல்களை இணையத்தின் வழியே அறிந்து கொண்டேன்.

09994846491 (whatsapp)

உங்களின் ஆதரவு வேண்டி…

Spirulina Palm Jaggery Groundnut Bar

Leave a Reply

Your email address will not be published.