கடந்த இரு வாரங்களாக இந்த நிலக்கடலை மற்றும் வெள்ளை எள்ளு சேர்த்து இடித்து செய்த உருண்டைகள் நல்ல படியாக மக்களை நிறைவு செய்துள்ளது.குறிப்பாக மூத்தவர்களையும் குழந்தைகளையும் இது கவர்ந்துள்ளது,நிதானமான கருபட்டியின் இனிப்பு சுவையுடைய இந்த உருண்டைகளை மக்களிடையே கொண்டு போய் சேர்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டின் ஆட்டுக்கல்லும் உலக்கையும் பயன்பாட்டுக்கு வந்து சேர்துள்ளது.நிலக்கடலையும் வெள்ளை எள்ளையும் சமவிகிதம் எடுத்து வறுத்து அதன் பின் கொஞ்சம் ஆற வைத்து ஆட்டுக்கல்லில் இட்டு உலக்கையினால் நன்கு இடித்து சரிபாதி கருப்பட்டி சேர்த்து நன்கு பிசைந்து கைகளினால் நன்கு பிடித்து  இளஞ் சூட்டோடு உருட்டி எடுத்து விட்டோம்.

இரண்டு நல்ல நினைவுகள் இதன் வழியே வந்து சேர்ந்தது,ஆட்டுக்கல்லு இங்க ஊர்ல அதுக்கு பேரு உரலு,அதுக்கும் எங்க வயசு இருக்கும்.இட்லிக்கு மாவு அரைக்கும் போது அப்பா,அண்ணங்க எல்லாரும் உரலை சுத்தி உர்கார்ந்து ஆட்டுவோம்,ஆளுக்கு இத்தனை சுத்துனு கணக்கு இருக்கு வலது கைல பாதி அப்புறம் இடது கைல மீதின்னு கதை பேசிக்கிட்டே ஆட்டுவோம்.அப்ப ஒரு சீசன்ல தக்காளி அதிகமாக விளைஞ்சு கிடக்கும் அதையும் அந்த உரல்ல போட்டு ஆட்டி எடுத்து தக்காளி தோசை சாப்பிட்டு இருக்கோம்,ஆனா முத நாளே ஆட்ட விட்டு பெண்ட கலட்டிடுவாங்க.மழை வெயில்ன்னு வெளில கிடந்து காய்ஞ்சிட்டே கிடக்கும்.மழைல அது மாதிரி நனையனும் அப்படின்னு ஆசை இருக்கும்.

இன்னொரு முக்கியம்மான ஞாபகம் உலக்கை பத்துனது ரெண்டு உயரத்துல இருக்கும்,அது பெரும்பாலும் சுத்தல்லேயே தான் இருக்கும்.பக்கத்துல யார் வீட்டுலயாவது வாங்கிட்டு போயிருப்பாங்க.அரிசி மாவு இடிக்க,மசாலா பொடி அரைக்க,கம்பு குத்தி எடுப்பாங்க. அதோட அடில நல்லா ஒட்டி இருக்கும் அதை வைச்சு தான் கண்டு பிடிப்போம் எதுக்காக உலக்கையை வாங்கிட்டு போயிருக்காங்கன்னு.அப்ப அது எங்களை விட உயரமா இருக்கும் தூக்க முடியாம தூக்கிட்டு வருவோம்.இரும்பு உலக்கை ஆரம்பத்துல கை எல்லாம் பொத்து போச்சு.

நல்லா கடிச்சு கடுக்கு முடுக்கு சத்தத்தோட சாப்பிடுறதை விட இப்படி மெதுவாக இருந்தா எல்லாரும் விரும்பி சாப்பிடுறாங்க.குறிப்பா மூனு நாலு வயசுக்கு மேல இருக்குற குழந்தைகளுக்கு சாப்பிட இதை கொடுத்து இருக்காங்க.அந்த குட்டிசு விரும்பி சாப்பிட்டு இருக்காங்க,அதோட சீனியர் சிட்டிசன் எல்லாம் போன் பண்ணி கேட்பாங்க நாங்க சாப்பிடுற மாதிரி எதுவும் செய்ய மாட்டிங்களான்னு,அவங்களையும் இந்த முறை நிறைவு பண்ணிட்டோம்.அவங்க சொன்னாங்க வெள்ளை எள்ளு எவ்வளவு முக்கியம் அப்படின்னு,அதனால தான் கோயில் பிராசதமா கூட குடுத்து இருக்காங்க.குழந்தைகளுக்கு இப்பவே இந்த ருசியை காண்பிச்சு பழக்கணும் அப்படின்னும் சொன்னாங்க.

இந்த மிட்டாய் உருண்டை எல்லாம் ஏதோ போன தலைமுறைக்கானது மாதிரி நினைச்சுகிறாங்க,ஆனா எவ்வளவு முக்கியம் அப்படின்னு நாட்கள் நகர நகர தெரியும்.அம்மாவோட லிஸ்ட்டுல இன்னும் இரண்டு மூனு சத்தான உருண்டைகள் (குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி) அடுத்த வாரம் செய்யலாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

என்னோட ரொம்ப நாள் ஆசை,பள்ளிக்கூடத்துக்கு போற குழந்தைகளுக்குன்னு தினம் ஒரு வித்தியாசமான திண்பண்டம் அவங்க எடுத்துட்டு போய் அவங்களா சாப்பிடனும் அது மாதிரி ஒரு திண்பண்ட டப்பா செய்யனும்.ஒவ்வொரு 10 நாளுக்கு ஒரு வாட்டி தேவைப்படுறவங்களுக்கும் கொரியர்ல அனுப்பி வைச்சுடலாம்.அடுத்த வாரம் பள்ளிக்கூடம் துவங்க போகுது, அடுத்த வாரமே ரெடி பண்ணி அனுப்பி வைக்கலாம்.தேவைப்படும் நண்பர்கள் வாட்ஸப் (09994846491) பண்ணுங்க உஙகளுக்கும் சேர்த்து ரெடி பண்ணி அனுப்புறோம்.அது இல்லாம உங்க குழந்தைங்க கருப்பட்டில வெல்லத்துல செஞ்ச எந்த இனிப்பை விரும்பி சாப்பிடுறாங்கன்னு சேர்த்தே கூட அனுப்புங்க.

இப்ப இடிச்ச வெள்ளை எள்ளும் நிலக்கடலையும் சேர்த்து செஞ்ச உருண்டை தயாரா இருக்கு…வாங்கிகோங்க

Groundnut White Seasame Mixed Soft Ball

 

Leave a Reply

Your email address will not be published.