கடந்த நான்காண்டுகளில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பிறந்தநாட்களில் அன்பினை பகிர்ந்து கொள்ள கருப்பட்டி கடலை மிட்டாயினை  தேர்ந்து எடுத்து அளித்துள்ளீர்கள்.இது மிகுந்த மனநிறைவான விஷயம். பிரபு அண்னா  முதல் முறையாக உங்கள்  பையனின் பிறந்தநாளுக்காக வாங்கினிங்க  , இன்னும் நன்றாக நினைவில் உள்ளது.மறக்க முடியாத நாட்கள் ,அது தொட்டு இன்று வரை உங்கள்  பையனின் ஒவ்வொரு வருட  பிறந்த  நாளிலும்   கருப்பட்டி கடலை மிட்டாய் இருப்பது ஆகப்பெரிய மகிழ்வு .ஆரம்பத்தில நலம்  விரும்பிகளான  பெரியண்ணன் ,ஆனந்த் அண்ணா ,அமர் அண்ணா உங்களோட பங்களிப்பின் வழியே தான் நகர ஆரம்பிச்சது.  பிறகு முகநூல் பதிவினை  பார்த்து விட்டு நிறைய ஊர்களில் இருந்து மக்கள் விரும்பி  குழந்தைகளின்  பிறந்தநாளுக்கும் நண்பர்களின் குழந்தைகளுக்கும்  வாங்கி பரிசாக கொடுத்தீங்க.எங்களுக்கு பிறந்தநாள் கொண்டத்துக்கு மிட்டாய் அனுப்புறதுனாலே ஒரு குட்டி சந்தோசம் வந்துடும் .நெகிழ்வான மனநிறைவான தொலைபேசி அழைப்புகளும் வந்து சேரும் ஒவ்வொரு கொண்டாட்ட நிகழ்விற்கு பிறகும்   …
மழலை பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்  அழைத்து பேசினீர்கள், மேலும் குறிப்பாக தாத்தா பாட்டிகள்  நன்மதிப்பும் ஆசிர்வாதமும் கிடைச்சது. உங்களோட பால்ய நாட்களில் நீங்க  விரும்பி சாப்பிட்டது அது பத்தின  மறக்க  முடியாத கதையினை , சுவையினை  பகிர்ந்துகிட்டிங்க ,சொந்த  ஊர்களில் குடிசை தொழிலாக கடலைமிட்டாய் தயாரித்த ஆட்கள் பற்றிய நல்ல நினைவுகளை  எங்களுக்கு சொன்னிங்க .இன்னும் குறிப்பா  கருப்பட்டி பற்றியும் அதனை எவ்வளவு வழிமுறைகளில் பயன்படுத்தினங்க  அப்படின்னு கேட்டப்ப உண்மையில்  பெரிய ஏக்கம் வந்ததுச்சு .நடுத்தர வயது மக்கள் விலை குறித்தும், இந்த தொழிலுக்கு வந்த விதத்தினை பற்றியும் அதிகம் கேட்டு தெரிஞ்சதோட இல்லாம,தொழில் சம்பந்தமா நிறைய ஆலோசனைகள் கொடுத்தீங்க.இளைஞர்கள் சுவையை ,வடிவமைப்பை இன்னும் புதியதான முயற்சிகள் குறித்தும், இது போன்ற உங்களோட முயற்சிகள் மற்றும் ஆசைகள் குறித்தும் உற்சாகமாக இன்னைக்கு வரைக்கும்  பேசிகிட்டு இருக்கீங்க  .
வெளிநாட்டில் வாழும் நண்பர்கள்,மிகுந்த ஏக்கத்துடனும் சந்தோஷத்துடன் உங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளுக்காக அனுப்பி வைக்க சொன்னிங்க.நான்கு ஐந்து முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கிட்டு ,ஊரில் பிள்ளைகள் கூட  இல்லாத ஏக்கத்தை நீக்குதற்காக எடுத்து கொண்ட மெனக்கெடல் எங்களுக்கு புரிஞ்சது.  மலேசியாவில் வாழும் ஒரு வயதான அம்மா ,காந்தி கடலை குறித்தும் அதனை இங்கிருந்து அங்கு கொண்டு சென்று  மீட்டு எடுத்து இன்று அதிகப்படியாக விளைய வைத்துள்ளார்கள்.மேலும் அந்த கடலை கொண்டு நிறைய உணவு பண்டங்கள் தயாரித்து விற்பதுடன்,அடுத்த  தலைமுறைக்கு கைமாற்றி கொடுத்துள்ளதையும் கூறினார்கள் . மிக நிறைவான உரையாடல் …அவர்களின் குரலில் அத்தனை அன்பும் பிரியமும் கலந்து இருந்தது .
உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி….
பெரிய ஆசை கருப்பட்டி கடலை மிட்டாயினை  பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு  சேர்க்க வேண்டும் என்பதுவே ,அதற்கான முழு முயற்சிகள் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளோம்.ஒவ்வொரு பெட்டியிலும் 30கிராம் எடையுள்ள 50 பாக்கெட்கள் இருக்கும்.அதன் ஒரு துவக்க புள்ளியாக  பிறந்த நாளுக்காக வாங்கும் பரிசு பெட்டிக்கு 7%  கழிவு  கொடுக்க உள்ளோம்.சிறிய முயற்சியாய் இருப்பினும் நம்ம ஊர் தின்பண்டம் நம் குழந்தைகளுக்கு சென்று சேரட்டும் …
வாங்கி கொள்ள

Leave a Reply

Your email address will not be published.