பள்ளிக்குழந்தைகளுக்கான தின்பண்ட பெட்டி

1.கருப்பட்டி கடலை உருண்டை
2.கருப்பட்டி கருப்பு எள்ளு உருண்டை
3.கருப்பட்டி வெள்ளை  எள்ளு உருண்டை
4.இடிச்ச நிலக்கடலை மற்றும் கருப்பு எள்ளு உருண்டை
5.இடிச்ச நிலக்கடலை மற்றும்  வெள்ளை  எள்ளு உருண்டை
6.ஆரோக்கிய உருண்டை (கேப்பை,முந்திரி,பாதாம் ,பேரீச்சை ,உலர்  திராட்சை ,நிலக்கடலை )
ஆறு வெல்வேறு உருண்டைகள் அடங்கிய தின்பண்ட பெட்டி .
விலை ரூபாய்.120
கருப்பட்டியின் மென்மையான இனிப்பு சுவையுடன் கூடிய இந்த உருண்டைகள் ஒவ்வொன்றும் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கானதாக நிச்சயம் இருக்கும் .அம்மாவின் மெனக்கெடல்கள் எல்லாம் கூடிய  இந்த உருண்டைகளின் தயாரிப்பு வேலைகள் அனைத்தும் கைகளினால் செய்துள்ளோம் .
பலமுறை பல விகிதங்களில் இந்த உருண்டைகளை செய்து பார்த்தோம் .சுவை மற்றும் ஆரோக்கியத்தின் உள்ளீடு சமஅளவில் உள்ளது .பெரிய அண்ணன் சின்ன அண்ணன்  மற்றும்  நண்பர்களின் குடும்பத்திற்கும் இந்த  இனிப்புகளை அனுப்பிவைத்து  பின்னூட்டங்களையும் பெற்று கொண்டு  சீர்படுத்தியுள்ளோம் .
அடுத்த முறை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வடிவங்களிலும் விதங்களிலும் இவற்றை வடிவமைக்க முயற்சிகளை துவக்கி   உள்ளோம் .மூன்று வயது துவங்கிய குழந்தை முதல் வயதானவர்களும் சாப்பிடும் விதத்தில் மூன்று உருண்டைகள் எளிதாக  கடித்து சாப்பிடும் படி மென்மையாகவும் மற்ற  மூன்று உருண்டைகள் கடித்து(மொறு மொறுவென) சாப்பிடும் படி  செய்துள்ளோம் .
சொந்த ஊர் திரும்பிய உற்காசத்தில் இருக்கும் எங்களுக்கு பலதரப்பட்ட நண்பர்கள் வீடு தேடி வந்து மிட்டாய்கள் வாங்கி செல்வது மிகுந்த மகிழ்வாக உள்ளது .அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை வழியே பயணிக்கும் நண்பர்கள் கூட நேரில் வந்து பெற்று செல்கிறார்கள் .குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தில் வைத்து வினோத் அண்ணன் எடுத்த கொடுத்த இந்த  புகைப்படங்களுக்கு மிக்க நன்றி…
To Buy : http://www.motherway.in/product/classroom-snack-box/

Leave a Reply

Your email address will not be published.