இந்த வார குங்குமம் இதழில் வந்து இருக்கும் கட்டுரை,”மீண்டும் கருப்பட்டி கடலை மிட்டாய்” நம்பிக்கை அளிக்கிறது

ஒவ்வொரு முறை இந்த தொழிலை ஏன் தேர்ந்தெடுத்திங்க என்கிற கேள்விக்கு பதில் அளிக்கும் போது ஓவ்வொரு முறையும் என் பதில்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.பால்ய கால நினைவுகள்,முழுக்க உடல் உழைப்பு சார்ந்த தொழில்,பலவிதமான மனிதர்களின் பங்களிப்பினை பெற்றால் மட்டுமே இதனை சரிவர செய்ய முடியும்,நொடி நொடியாய் நம் கவனம் தொழில் மீது இருந்தாக வேண்டும்,எங்கள் ஊரின் வெக்கையை இன்னும் ஒரு படி உணர வைக்கிறது.

இந்த தொழில் எந்த விதமான பொருட்களையும் வீணடிப்பதில்லை, பலனை அனுதினமும் அனுபவிக்கிறேன்,பணம் என்பதை தாண்டி மனிதர்களின் சந்தோஷ முகங்களை காண்கிறேன்,கூட்டு குடும்ப உழைப்பினை கோரும் அதற்காகவே அனைவரும் ஒன்று சேர்வார்கள்,அடிப்படையிலிருந்து ஒரு பொருள் உருவாவது குறித்த செயல் அறிவு கிடைக்கப்பெற்றது… இன்னும் இன்னும் கற்று கொண்டு இருக்கிறோம்
மூத்த தொழில்காரர்களிடமிருந்து மேலும் இதனை இன்னும் உயிர்ப்போடு செய்யும் இன்றைய நவீன மனிதர்களிடம் இருந்தும்…

 

Leave a Reply

Your email address will not be published.