கருப்பட்டி கடலை மிட்டாய் தொழில் மிகுந்த மனநிறைவை அளித்து வருகிறது.அதற்கான காரணம் அவற்றுக்கான மூலப்பொருட்களை மிகுந்த தரத்துடன் தொடர்ச்சியாக பெற்று வருவது தான்.

குறிப்பாக நிலக்கடலையும் கருப்பட்டியும்,விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் பண்ணிக்கொள்கின்றோம். தொழில் துவங்கிய நாள் முதல் இதற்கான திட்டமிடல் இருந்தது, ஆனால் இத்தனை காலங்கள் கழித்து மட்டும்தான் முழுமையான மனநிறைவை அளித்துள்ளது.

அதன் காரணமாகவே கருப்பட்டி கடலை மிட்டாய் முன்பைவிட இன்னும் உற்சாகமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகின்றேன். செய்தித்தாள் மாத இதழ் முகநூல் மற்றும் எனது இணையத்தின் வழியாக கூட தொடர்ச்சியாக இதுகுறித்து குறித்து பேசி வருகின்றேன்.

கருப்பட்டி முழுவீச்சில் உற்பத்தியாகும் இந்த சித்திரை மாத காலத்தில் அதனை அதிக அளவில் மக்களை எப்படி பயன்படுத்த வைப்பது என்றும் யோசித்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வாரத்தில் ஒருவராவது அதுவும் இளைய குரல் உங்களது வீடியோ பார்த்தேன் கட்டுரை வாசித்தேன். நானும் இதுபோன்ற தொழில் ஒன்று செய்ய உள்ளேன்.இதை சொல்லும்போது உண்மையில் பொறுப்புணர்வு இரு மடங்காகிறது. அவர்களுக்கும் எப்படியாவது ஒரு நல்வழியைக் அல்லது ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முயன்று வருகின்றேன்.

தொடர்புக்கு :9994846491
www.motherway.in
motherway.in@gmail.com

Leave a Reply

Your email address will not be published.